முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை கண்டுபிடித்து தரக்கோரி காவல்துறையிடம் புகார் ! !

11/30/20130 comments


முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை கண்டுபிடித்து தரக்கோரி காவல்துறையிடம் புகார் கொடுத்த சமூக ஆர்வலர் முகம்மது மாலிக்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த கட்டிடத்தை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தரக்கோரியும் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையம் வந்து சமூக ஆர்வளர் முகம்மது மாலிக் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதனை இன்ஸ்பெக்டர்(பொ) சாமிநாதன் பெற்றுக் கொண்டார். புகார் மனுவில் சமூக ஆர்வளர் முகம்மது மாலிக் கூறியிருப்பதாவது.


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சி நிர்வாகத்தினால் பயன்படுத்தி வந்த ஒரு பழமை வாய்ந்த கட்டிடம் இருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க அந்த கட்டிடத்தில் மிகவும் தரமான செங்கல், அறிய வகை மரங்களால் ஆன விலை மதிக்க முடியாத கதவு நிலை, ஜன்னல்கள,; உத்திரங்கள், என மரப்பொருட்கள,; மேலும் அதிக எடையுள்ள கம்பிகள,; கட்டிடத்தின் மேல்புறத்தில் தரமான தட்டு ஓடுகள் காணப்பட்டன. மேலும் கட்டிடத்தின் உட்புறத்தில் மரங்களால் ஆன பல இலட்சம் மதிப்புள்ள 5 பீரோல்கள் மற்றும் கட்டில் போன்ற பர்னிச்சர் பொருட்கள் இருந்தன. மூன்று ராட்சத மின்மோட்டார்கள் இருந்தன. மேலும் பேரூராட்சியின் பல பொருட்கள் வைக்கப்பட்ட நிலையில் குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 21.11.2013 அன்று நான் ஒரு மனு கொடுப்பதற்கு பேரூராட்சி அலுவலகம் சென்றபோது அந்த பழமை வாய்ந்த கட்டிடம் இருந்தது. மீண்டும் மனு கொடுப்பதற்காக கடந்த 25.11.2013 ம் தேதி அன்று பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றேன்.

அப்போது அந்த பழமை வாய்ந்த கட்டிடத்தை காணவில்லை. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். உடனே பேரூராட்சி அதிகாரி மற்றும் அலுவலர்களிடம் இதுபற்றி கேட்டேன். கட்டிடம் இங்கேதான் இருந்தது எங்க போனது என்று தெரியவில்லையே என்று பொறுப்பற்ற பதிலை கூறினார். நானும் இரண்டு நாட்களாக பல இடங்களில் தேடிப்பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. பலரிடம் விசாரித்தேன். தகவல் ஏதும் இல்லை. சமூகம் அய்யா அவர்கள் காணாமல் போன பேரூராட்சி வளாகத்தில் இருந்த அந்த பல இலட்சம் மதிப்புள்ள பழமை வாய்ந்த கட்டிடத்தையும,; கட்டிடத்திற்குள்; இருந்த பல இலட்சம் மதிப்புள்ள பொருட்களையும் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கூறுகையில் முகம்மது மாலிக் பேரூராட்சி கட்டிடத்தை காணவில்லை என்று மனு கொடுத்தார். பேரூராட்சி சம்மந்தப்பட்ட அபிஷியல் கட்டிடம் என்பதால் பேரூராட்சி செயல் அலுவலரிடமே கேட்கலாமே என்றேன். அதன்படி செயல் அலுவலரிடம் தகவல் கூறச் சொல்லி இருக்கேன் என்றார். இதுகுறித்து செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி கூறுகையில் பழுதடைந்த கட்டிடம் டென்டர் எடுக்க ஆள் யாரும் வராததால் நிர்வாகமே முடிவு செய்து அப்புறப்படுத்தினோம் என்றார்.

காணாமல் போன கட்டிடத்தை கண்டுபிடித்து தரக்கோரி போலிசில் புகார் கொடுத்த செய்தி முத்துப்பேட்டை பகுதியில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech