வாகனங்களில் விபத்துகள் நடைப்பெறும் முன்பு உணர்த்தி தடுக்கும் கருவி. முத்துப்பேட்டை பட்டதாரி வாலிபர் கண்டுப்பிடிப்பு.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அருண்குமார்(26) டிப்ளமோ பட்டப்படிப்பு முடித்து சென்னை தனியார் நிறுவனத்தில் பணிப்புரிகிறார். பள்ளி பருவத்திலிருந்து அறிவியல் கண்டுப்பிடிப்புகள் பலதும் தான் கண்டுப்பிடித்து பாராட்டுகளும் சான்றுகளும் பெற்ற அருண்குமார். சமீபக்காலமாக சாலை விபத்துகள் தொடர்ந்து பல இடங்களில் நடைப்பெற்று வருகிறது. அதன் மூலம் பல உயிர்கள் பலியாகி வருகிறது.
அதனை
தடுத்து நிறுத்த அறிய கண்டுபிடிப்பைக் கண்டுப்பிடித்து வாகன
விபத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சிந்தித்த அருண்குமார்
இந்த அறிய அறிவியல் கண்டுப்பிடிப்பை உருவாக்கி உள்ளார். அதான் ‘விபத்துகள்
நடக்கும் முன்பு உணர்த்தி தடுக்கும் கருவி.’ இதில் ஒரு காரில் அந்த கருவி
பொருத்தாப்பட்டால் அந்த கார் சென்றுக் கொண்டிருக்கும் போது தூரத்தில்
வாகனங்கள் ஏதும் மோதுவது போல் வந்தாலும,; குறுக்கே வாகனங்கள், உயிரினங்கள்
சென்றாலும,; சுவர் மற்றும் மரங்கள் மோத தென்பட்டாலும் இந்ந கருவி மூலம்
ஓட்டும் டிரைவருக்கு எச்சரிக்கும், அப்படி அவர் அசந்து விட்டால் கார் தானாக
நின்று சத்தம் போட்டு லைட் மினுக்கும், தப்பி விடலாம், அதையும் செய்ய
தவரினால் சிறிது நேரத்தில் அனைத்து கதவுகளும் தானாக திறந்துக் கொள்ளும்,
இதில் உடல் நிலை முடியாதவர்கள் மாட்டி கொண்டால் அவர்களுக்கு வசதியாக
அவர்களுக்கு உதவ ஜி.பி.எஸ் என்ற கருவி மூலம் 108 ஆம்பலன்ஸ்க்கு அல்லது நாம்
ஏற்கனவே பதிவு செய்த செல் நம்பருக்கு தகவல் அனுப்பும் போன்ற வசதிகள் இந்த
கருவியில் உள்ளது என்கிறார். அருண்குமார்.
சென்ற
ஆட்சியில் உயர் கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதன் பாதி
கண்டுப்பிப்பை மதுரையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் நேரில் கண்டு என்னை
பாராட்டி சான்று வழங்கினார். தற்பொழுது அதன் கண்டுப்பிடிப்பை விரிவு
படுத்தி இந்த அறிய வசதிகளை கண்டுப்பிடித்து உள்ளேன். தமிழக அரசு இதற்கு
அங்கீகாரமும், ஊக்கமும், உதவியும் செய்தால் எனது கண்டுப்பிடிப்பு மக்கள்
மத்தில் தெரிந்து விழிப்புணர்வு ஏற்பட்டு நடைமுறை படுத்தி மக்களை
விபத்திலிருந்து காக்கப்படும் என்றார் இளைஞர் அருண்குமார்.


Post a Comment