சேலம் டவுன் முள்ளுவாடி கேட் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் நேற்று இரவு ரவுடிகளால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார் .சேலத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சி மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக போலீசாரால் ஷாஜகான் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.பின்னர் போலீசார் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.பிறகு அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்....
நேற்று இரவு அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள டிபன் கடைக்கு சாப்பிட நண்பர்களுடன் சென்றார்.அங்கு அமர்ந்து அவர் டிபன் சாப்பிட்டார். அப்போது அங்கு இருட்டில் மறைந்து இருந்த ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து ஷாஜகானை வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ஷாஜகான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்...

Post a Comment