திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்யிடம் நேரில் மனு கொடுத்தார்

10/28/20140 comments








திருவாரூர் மாவட்ட ஆட்சியரை தலைவர் கலைஞர் அவர்களின் சார்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில கோரிக்கை மனு கொடுத்தார்.அம்மனுவில் அதிமுக அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

1.உடனடியாக பாதிக்கப்பட்ட 20,000 ஏக்கர் நிலத்திற்கு பயிர் காப்பீடு மற்றும் வெள்ள நிவாரண நிதியை வழங்கி விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும்.

2.தியாகராஜர் ஆலயம் கமலாலய திருக்குளத்தில் இடிந்து விழுந்த மதில் சுவர்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்


திருவாரூர் செல்லும் வழியில் இளவங்கர்குடியில் இறங்கி கடும் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ள விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்பு திருவாரூரில் இடிந்த கமலாலய குளத்தின் மதில் சுவரினையும் நேரில் சென்று மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்.பி விஜயன், மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன்,மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உடன் இருந்தார்கள்.



Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech