முத்துப்பேட்டைக்கு இன்று 23.09.2014 காலை 10 மணியளவில் தமுமுக பொது செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் வருகை தந்து ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து சட்ட ரீதியான
ஆலோசனை வழங்கினார்.
முத்துப்பேட்டையில் கடந்த 3 ம் தேதி காவி பயங்கரவாதிகளால் முஸ்லிம்கள் மீது நடந்த வன்முறை தொடர்பாக மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க கோரி இன்று மாலை 4 மணியளவில் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் (SP) மகேஷ் குமார் அவர்களை தமுமுகவின் பொது செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் நேரில் சந்தித்தார்.
பின்னர் இரவு 7 மணியளவில் தஞ்சை மண்டல DIG யை தமுமுக பொது செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் நேரில் சந்தித்தார்.
இதில் நாச்சிகுளம் தாஜூதீன் மாநில செயற்குழு உறுப்பினர்,மமக மாநில அமைப்பு செயலளார் ராவுத்தர்ஷா,தமுமுக மாவட்ட தலைவர் முஜீபுர் ரஹ்மான,தமுமுக மாவட்ட செயலாளர் குத்துபுதீன்,மமக மாவட்ட செயலாளர் சீனி.ஜெகபர் சாதிக்,மாவட்ட பொருளாளர் ஹக்,தமுமுக மாவட்ட துணை தலைவர் முகமம்து அலீம்,தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர் முகம்மது பைசல்,மமக நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது,தமுமுக நகர செயலாளர் NMM சீமான் மற்றும் நகர நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.




Post a Comment