முத்துப்பேட்டை நகரில் குளம் குட்டை வாய்க்கள் களை தூர் வார வேண்டும் TNTJ கோரிக்கை

11/13/20140 comments





முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயலாளர் முகமதுபுகாரி பேரூராட்சி செயல்அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட குளம், குட்டைகள் தான் முத்துப்பேட்டை நகர மக்களுக்கு நீர்நிலை ஆதாரங்கள். மழைகாலங்களில் பெய்யும் மழை மற்றும் ஆற்றில் வரும் நீரை இதில் தேக்கி வைப்பதன் மூலம் கோடைகாலங்களில் நிலத்தடி நீர் குறையாமல் பாதுக்காக்கலாம். இப்பொழுது மழைகாலங்கள் ஆரம்பமாக இருப்பதால் குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகள், வாய்க்கால்கள் காடுகளாகவும் சாக்கடை மற்றும் குப்பைகள் மேடுகளாகவும் மாறிப்போய்விட்டது.

இவற்றை அனைத்தையும் தூர்வாரி சுத்தம் செய்து தரவேண்டும். இதுகுறித்து ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை அதன் விளைவு இன்று நீர் நிலைகளை சரியாக பராமறிக்காததால் சென்ற கோடைகாலங்களில் முத்துப்பேட்டை மக்கள் தண்ணீருக்காக பட்ட சிரமத்தை காணமுடிந்தது. அதைபோல் முத்துப்பேட்டை மக்கள் தாங்கள் கடன்களை பெற்றும் இருக்கிற பணங்களை வைத்து வீடுகள் கட்டி வறுமையில் 'சி' கிரேடைவிட மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டு 'ஏ' கிரேடு வரி செழுத்தி வருகிறார்கள் அதனை உடனடியாக ஆய்வு செய்து வரி கட்டணத்தை குறைக்க வழிவகைகள் செய்ய வேண்டும்.

இந்த இரு கோரிக்கைகளும் உடனடியாக பணிகள் துவங்கி நிறைவேற்ற படவில்லை என்றால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை ஒப்புதலோடு முத்துப்பேட்டையில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.

நன்றி:முகைதீன் பிச்சை நிருபர்

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech