திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7,445 கர்ப்பிணிகளுக்கு ரூ.7.43 கோடி நிதியுதவி ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல் இன்று வரையும் 7,445 கர்ப்பிணிகளுக்கு ரூ.7.43 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு துறைகளின் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருள்மொழி ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்ட செயல்பாடு மற்றும் பயனடைந்த பயணாளிகளின் எண்ணிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறையின் அரசு முதன்மை செயலாளருமான டாக்டர் அருள்மொழி கலந்து கொண்டார்.
அவர், அரசின் சிறப்பு திட்டமான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தில் பயனடைந்துள்ள பயனாளிகளின் எண்ணிக் கை மற்றும் இலவச மடிக்கணினி, சைக்கிள், பசுமை வீடுகள், தாய் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம் உட்பட பல்வேறு திட்டங் கள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த மாவட்டத்தில் நடப் பாண்டில் இதுவரையில் 7 ஆயிரத்து 445 கர்பிணி பெண்களுக்கு ரூ.7 கோடியே 43 லட்சத்து 44 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இலவச மடிக் கணினி 27 ஆயிரத்து 163 பேருக்கும், இலவச சைக்கிள் 13 ஆயிரத்து 495 பேருக்கும், இலவச பஸ் பாஸ் 28 ஆயிரத்து 426 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். மேலும் தாய் திட்டத்தில் சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி, மயான மேம்பாடு, மயான சாலை என 1840 பணிகள் ரூ. 23 கோடியே 16 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 1097 பணிகள் ரூ.20 கோடியே 25 லட்சம் மதிப்பில் நடை பெற்று வருகிறது. பசுமை வீடு கட்டும் திட்டத்தில் 2011-12 நிதியாண்டில் 1657 வீடுகளும், 2012-13 நிதியாண்டில் 1647 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 1647 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.ஒ மணிமாறன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் துரைசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், வேளாண்மை பொறியியல் துறை மூலம் தலா ரூ.4 லட்சம் மானியத்தில் 2 பேரு நெல் நடவு இயந்திரம், தலா ரூ.45 ஆயிரம் மானியத்தில் 20 பேருக்கு உழவு இயந்திரங்களை டாக்டர் அருள் மொழி வழங்கினார்.

Post a Comment