புயல் இன்று கரையைக் கடக்கும் - பள்ளிகளுக்கு விடுமுறை

11/16/20130 comments


தமிழகத்தில் புயல் இன்று கரையைக் கடக்கும் - பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்துள்ளது.

இது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech