தமிழகத்தில் நாளை 'ஹெலன்' கரையைக் கடக்கும்

11/21/20130 comments



வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ! !
 
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயலான ஹெலன் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓரிருநாள்களுக்கு முன்பு, நாகை, கடலூர் மாவட்டங்களை அச்சுறுத்தி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், தற்போது மீண்டும் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய ஹெலன் புயல் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே ஓங்கோல் என்ற இடத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மைய ஆய்வு கூறுகிறது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வடகிழக்கில் 460 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து 260 கி.மீ. தொலைவிலும் ஹெலன் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech