சென்னை : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக உருமாறியுள்ளதால் இன்று வட தமிழகத்தில் கடும் மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் தீவு அருகே நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. ஹெலன் என பெயரிடப்பட்டுள்ள அப்புயல் நாளை (21.11.2013) இரவு ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கவாலி எனும் இடத்தை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது (நாளை) 120 கீமி வேகத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்று வீசும் என்றும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது....

Post a Comment