மத்திய பிரதேச முஸ்லிம் குடும்பம் காவல் நிலையத்தில் பரிதவித்து நின்ற கொடுமைகள்.

11/16/20130 comments

மத்திய பிரதேச முஸ்லிம் குடும்பம் காவல் நிலையத்தில் பரிதவித்து நின்ற கொடுமைகள்.

மத்திய பிரதேசம் ரத்லம் என்ற ஊரை சார்ந்த ஷஹினாகான் வயது 50 முஹம்மத் சாமி வயது 24 பாத்திமா கான் வயது 19 ஆகிய 3 வரையும் அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் 13 ஆண்டு காலம் அரிசி கடை வைத்து நடத்தி வந்த அப்பாஸ் அலி என்பவர் போலியான முகவரியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தெற்கு தெரு என சொல்லி வந்துள்ளார் அவர்களும் இவர் 5 வேலை தொழுகை யாளி என்பதால் இவர் சொன்ன வகையறாக்களை நம்பி உள்ளனர் இறுதில் பாஸ்போர்ட் மற்றும் 60 ஆயரம் பணத்துடன் தனது மகனை பயணம் அனுப்பி வைக்கும் கனவுடன் திருச்சிக்கு தனது சொந்த ஊரில் இருந்து ரயிலில் திருச்சி ரயில்வே நிலையத்தில் அப்பாஸ் அலியை சந்தித்து உள்ளார் அவர் அவர்களை உபசரிப்பது போல் நாடகம் ஆடி அவர்களுடைய பாஸ் போர்ட் மற்றும் 60 ஆயிரம் பணம் கேலக்சி செல்போன் ஆகியவைகளை பறித்து கொண்டு தலைமறைவாகி விட்டார் செய்வது அறியாது திருச்சி காவல் நிலையத்தில் புகார் செய்யவே அவர்களோ முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கும் படி அறிவுறுத்தி வழி அனுப்பி வைத்து விட்டனர் இங்கு வந்த அவர்கள் அப்பாஸ் அலியின் முகவரி போலியானது என்று அறிந்து கையில் உணவுக்கு கூட காசு இல்லாமல் பரிதவித்து நின்றார். இத்தகவல் வழக்கறிஞர் தீன் முகமது நகர செயலாளர் மமக அவர்கள் மூலம் அலைபேசி வழியே எனக்கு வந்து சேர உடனே நான் காவல் நிலையம் சென்று அவர்களிடம் விபரம் கேட்ட போது தான் உணவு சாபிட்டே ஒரு நாள் ஆகி விட்டது என்றும் தற்காலம் திருச்சியில் இருந்து ஊர் செல்ல 3000 கை சிலவிர்க்கு 500 ஆகா மொத்தம் 3500 தேவை என்றனர் நான் உடனே என் நண்பர்களுக்கு அலைபேசி வழியே தகவல் சொன்னேன் முதல் நபராக வழக்கறிஞர் தமுமுக பொறுப்பாளரும்மான தீன் முகமது 1000 பிறகு எனது நண்பர் ஜாகிர் 1000 தவ்ஹீத் மாவட்ட முன்னாள் தலைவர் அன்சாரி 500 ஒப்பந்தகாரர் அண்ணன் தேனா சீனா அவர்கள் 1000 நண்பர் MMR முஜிபுர் ரஹ்மான் அவர்கள் 1000 பஷீர் அவர்கள் 500 முஹைதீன் மாமா 200 ஆகா மொத்தம் 5200 இதை எதற்கு பெயர்களை குறிப்பிடுகிறேன் என்றால் சொன்ன 5 நிமிடத்தில் இவர்கள் பணம் கொடுத்து அனுப்பினார்கள் தமுமுகவின் நகர செயலாளர் முத்துபேட்டை பைசல் விரைந்து உதவிக்கு செயல்பட்ட விதம் எம்மை மிகவும் கவர்ந்தது கிடைக்க பெற்ற பணத்தை காவல் நிலையத்தில் வைத்து அண்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கச்சி இந் நகர செயலாளர் தேனா சீனா சாகுல் ஹமீது அவர்கள் மூலம் சம்பந்த பட்ட வர்களிடம் அவர்கள் கேட்ட தை விட கூடுதலாக கொடுக்க பட்டது அரசியல் இயக்கம் பாராமல் ஒரு முஸ்லிம் குடும்பம் நிராயுத பாணியாக நிற்பதை அறிந்து தகவல் கிடைத்த நிமிடத்தில் அதவும் அலை பேசி வழியே உதவி கேட்ட உடன் நிமிடத்தில் உதவி செய்த என் நண்பர்களுக்கு அல்லாஹு கூலி கொடுக்கட்டும் .

நன்றி:கவிஞர் பஷீர்
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech