ஓரிறை கொள்கையில்
ஒளிரசெய்யும் நம் மார்க்கம் .
ஒருவருக்கொருவர்
ஒற்றுமையை வளர்க்கும் மார்க்கம்.
போட்டி ,பொறமை தனை
விரட்டிடும் மார்க்கம்.
பொய்,புரளி .பித்தலாட்டம்
அதட்டி தடுக்கும் மார்க்கம்.
பிறர் துரோகம் செய்தாலும்
நீ..துரோகியாய் பார்க்காதே ..
குறைகூறி சபித்தாலும்
கோபத்தை காட்டாதே ..
பிழையென்று விட்டு விடாதே
திருத்தி எழ தவரிடாதே..
பிறக்கும் போது எதிரியில்லை
இறக்கும் போது எதுவுமில்லை.
மதிக்க தெரியாத மனிதனிடம்
மதிப்பை கொடுக்க மறந்திடாதே .
முகநூல் (fb) ஒன்றும் குப்பைதொட்டியல்ல
கொச்சை வார்த்தை கொட்டி போக ...
ஊர் பெயரில் முகவரி வைத்து
ஊர்க்காரனை கொக்கரிப்பது தவறு.
நமக்குள்ளே ஒற்றுமையில்லையே-நம்
சமுதாயம் வெற்றிபெற வாய்ப்பேயில்லை.
புறம் பேசுவதை விட
கொடியது பழிவாங்குதல்,
நீயா ?நானா? என்பது பலமல்ல
நம்முடைய பலவீனம்.
எதிர்மறையாய் நேசி -நாம்
எல்லோரும் ஒருநாள் மரணவாசி.
"முத்துபேட்டை கவிஞன்"
மு.யாகூப் அலி(17-11-13)
ஒளிரசெய்யும் நம் மார்க்கம் .
ஒருவருக்கொருவர்
ஒற்றுமையை வளர்க்கும் மார்க்கம்.
போட்டி ,பொறமை தனை
விரட்டிடும் மார்க்கம்.
பொய்,புரளி .பித்தலாட்டம்
அதட்டி தடுக்கும் மார்க்கம்.
பிறர் துரோகம் செய்தாலும்
நீ..துரோகியாய் பார்க்காதே ..
குறைகூறி சபித்தாலும்
கோபத்தை காட்டாதே ..
பிழையென்று விட்டு விடாதே
திருத்தி எழ தவரிடாதே..
பிறக்கும் போது எதிரியில்லை
இறக்கும் போது எதுவுமில்லை.
மதிக்க தெரியாத மனிதனிடம்
மதிப்பை கொடுக்க மறந்திடாதே .
முகநூல் (fb) ஒன்றும் குப்பைதொட்டியல்ல
கொச்சை வார்த்தை கொட்டி போக ...
ஊர் பெயரில் முகவரி வைத்து
ஊர்க்காரனை கொக்கரிப்பது தவறு.
நமக்குள்ளே ஒற்றுமையில்லையே-நம்
சமுதாயம் வெற்றிபெற வாய்ப்பேயில்லை.
புறம் பேசுவதை விட
கொடியது பழிவாங்குதல்,
நீயா ?நானா? என்பது பலமல்ல
நம்முடைய பலவீனம்.
எதிர்மறையாய் நேசி -நாம்
எல்லோரும் ஒருநாள் மரணவாசி.
"முத்துபேட்டை கவிஞன்"
மு.யாகூப் அலி(17-11-13)

Post a Comment