திருவாரூர் கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை

11/17/20130 comments

வங்கக்கடலில் புயல் எதிரொலி அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் திருவாரூர் கலெக்டர் தகவல்

திருவாரூர். :   திருவாரூர் கலெக்டர் நடராஜன்   வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
வங்கக் கடலில்  ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரண மாக நாகப்பட்டிணம் அருகே இன்று புயல் கரை யை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மூலம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடும் காற்று மற்றும் மழை யினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்யவும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகள் திருவாரூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்களிலும் மாவட்ட வருவாய் அலுவ லர் நிலை யில் உள்ள மண் டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு நிவாரண பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை தங்க வைக்க திருமண மண்டபம், பள்ளி கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நியாய விலைக் கடைகளில் தேவையான அளவு உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள் ளன. ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய மணல் மூட்டைகளும், மீட்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்தில் ஏற்படும் தடைகளை சரி செய்ய பணியாளர்கள் மற்றும் மின்துறையினர், பொது சுகாதார துறையினர், மருத்துவக் குழுவினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் என அனை வரும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ரப்பர் படகுகளும் நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று அனைத்து முன்னேற்பாடுகளும் திருவா ரூர் மாவட்டத்தில் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள் ளது. இவ்வாறு கலெக்டர் நட ராஜன் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech