திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெற்று கொள்ளலாம்

11/25/20130 comments


திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கை:

 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் இன்று முதல் பெற்று கொள்ளலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்தாண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்று மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் இரண்டு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் துர்காலயா ரோட்டில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ் பெற்று கொள்ளலாம். வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த மதிப்பெண் சான்றிதழை பெற வருபவர்கள் தங்களது புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை நகல் மற்றும் தேர்வுக்காக வழங்கப்பட்ட ஹால்டிக்கெட் நகல் கொண்டுவர வேண்டும்.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech