கேம்பஸ் தினம் ! !
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப்
துவங்கப்பட்ட தினமான நவம்பர் 7 ஆம் தேதி நாள் ஒவ்வோர் ஆண்டும் கேம்பஸ் டே
என மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். சென்ற கேம்பஸ் டே முதல், மெளலான அபுல்
கலாம் ஆசாத் பிறந்த தினமான நவம்பர் 11 நமது தேசிய கல்வி தினம் வரையிலான
ஐந்து நாட்கள், அரசுகளின் தவறான கல்வி கொள்கை குறித்து தேசிய அளவிலான
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொடி ஏற்றுதல், செமினார், பொது நிகழ்ச்சி,
மற்றும் பேரணி என்பன இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு
பகுதியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி
நடைபெற்றது.
அதில் முத்துப்பேட்டை கேம்பஸ் ஃப்ரண்டின் ஒருங்கிணைப்பாளர் தமீம் அன்சாரி தலைமை தாங்கி உரை
நிகழ்த்தினார். அதன் பின்பு நகர செயற்குழு உறுப்பினர் ராசிக் பரீத் கொடி
ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியாக நகர செயற்குழு
உறுப்பினர் அப்துல் ரஜாக் நன்றியுரை ஆற்றினார்.
இதில் முத்துப்பேட்டை கேம்பஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்...
___அகமது


Post a Comment