முசாபர் நகர் கலவரத்தை தூண்டிய பாஜக MLA களுக்கு நாளை பாராட்டு விழா !

11/21/20130 comments

 உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கலவரத்தைத் தூண்டிய புகாரில் சிறைவாசன் அனுபவித்த பாரதிய ஜனதா கட்சியின் 2 எம்.எல்.ஏக்களுக்கு நாளை பாராட்டு விழா நடத்தப்படுவது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபரகரில் இருபிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில் 49 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

இந்த மோதலின் போது கலவரத்தை தூண்டும் வகையில் செயப்பட்டதாக பாஜக எம்.எல்.ஏக்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது.

ஆனால் உள்ளூர் நீதிமன்றம் இருவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரு எம்.எல்.ஏக்களுக்கும் ஜாமீன் கிடைத்தது. தற்போது சிறையில் இந்த இரு எம்.எல்.ஏக்களுக்கும் பாராட்டு விழா நடத்த உத்தரப்பிரதேச மாநில பாஜக முடிவு செய்திருக்கிறது.

குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நாளை ஆக்ராவில் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் இந்த இரு எம்.எல்.ஏக்களும் சிறப்பிக்கப்பட இருக்கின்றனர். இதற்கு மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech