திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் 23ம் தேதி லோக் அதாலத் நடக்கிறது.
திருவாரூர் மாவட்ட கண்கானிப்பாளர் (SP) காளிராஜ் மகேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியா முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் பல லட்சம் வழக்குகளை தீர்த்து வைப்பதற்காக வரும் 23ந் தேதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை நடத்தி தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு கான உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெறுவதால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை தீர்வு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், வழக்காளிகளும், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், குடும்ப பிரச்சனை காரணமாக வழக்கு நிலுவையில் இருப்பவர்களும், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் இந்த மக்கள் நீதி மன்றத்தை அணுகி தீர்வு காணலாம்.
எனவே சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன் அல்லது நீதிமன்றங்களை உடன் அணுகுமாறு எஸ்.பி காளிராஜ் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Post a Comment