திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர தமுமுக அலுவலகத்திற்கு இன்று 29.12.2013 M.தமிமுன் அன்சாரி பொது செயலாளர் மமக , Dr.முகம்மது சர்வத்கான் MBBS மாநில மாணவர் அணி செயலாளர் தமுமுக, ராவுத்தரப்பா மாவட்ட துணை செயலாளர் தமுமுக ஆகியோர் வருகை தந்தார்கள்.
மமக பொது செயலாளர் தமிமுன் அன்சாரி பத்திரிக்கையாளர் பேட்டி:
ஜனவர் 10ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு நடக்கிறது.அதில் மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.
பாஜக எதிர்க்கூடிய பலமான அணி தான் தமிழ்நாட்டுக்கு தேவை.
மோடியின் அலை என்பதேல்லாம் மாயம் தான்.ஆயிரம் மாய வேலைகள் செய்தாலும் நரேந்தர மோடியால் டெல்லியை நெருங்க முடியாது.சில தமிழ் உணர்வாளர்கள் காங்கிரஸ் கட்சியே ஒழிக்க வேண்டுமென கருதி பாஜக ஆதரிக்க கூடாது என்கிறார்கள்.
சுப்பிரமணிசாமி, சுஸ்மா சுவராஜ் ஆகியோர் பாஜகவில் இருக்கும் வரையும் தமிழ் இனத்திற்கு பாதுகாப்பு இல்லை.மதிமுகவும் , பாமகவும் பாஜகாவுக்கும் தோள் கொடுப்பதை தவிப்பது தான் தமிழ்நாட்டுக்கு நல்லது என்றார்.
இதில் முகம்மது மாலீக் மு.மாவட்ட செயலாளர் மமக , வக்கீல் தீன் முகம்மது நகர செயலாளர் மமக ,முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தார்கள்.....




Post a Comment