முத்துப்பேட்டையில் TNTJ கிளை-2 சார்பகா இரத்த தான முகாம்

12/22/20130 comments











ஏக இறைவனின் திருப்பெயரால் ..

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் இன்று 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் ஆசாத்நகர் பள்ளிக்கூடம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது.

இதில் அப்துல் அஜீஸ் கிளை தலைவர் TNTJ அவர்கள் தலைமையில்  நடைப்பெற்றது மற்றும் நிஜாம் அலி கிளை துணைத்தலைவர் TNTJ அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .

இந்த இரத்ததான முகாமை R.கணபதி DSP  அவர்கள்  துவங்கி வைத்தார்கள்.
இதில் காஜா மைதீன் மாவட்டபேச்சாளர் மாணவர் அணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இந்த முகாமில் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணச்சலம் , கவிஞர் பஷீர்,வர்த்தக கழகம் தலைவர் ராஜா ராம், Dr.இளங்கோ மற்றும் சமூக ஆர்வலர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இதில் 37 சஹோதரர்கள் இரத்தத்தை தானமாக கொடுத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

இறுதியில் தமிம் அன்சாரி செய்தி தொடர்பாளர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.




தகவல்:செய்யது இப்ரஹீம்


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech