திருவாரூர் மாவட்ட வாக்காளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு

1/14/20140 comments

திருவாரூர் மாவட்ட இறுதி பட்டியல் வெளியீடு 4 சட்டப்பேரவை தொகுதியிலும் 9.17 லட்சம் வாக்காளர்கள்36,607 பேர் சேர்ப்பு:11,680 பேர் நீக்கம்

திருவாரூர், : திருவா ரூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 9 லட்சத்து 17 ஆயிரத்து 712 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். புதிதாக 36 ஆயிரத்து 607 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 11,680 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. டி.ஆர்.ஒ மணி மாறன் முன்னிலை வகித் தார். கலெக்டர் நடராஜன் பட்டியலை வெளியிட, ஆர்.டி.ஒ பரமசிவம், மன்னார்குடி ஆர்.டி.ஒ சுபு ஆகி யோர்  பெற்றுக்கொண்டனர்.

இதில் திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 377 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 216 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 600 வாக்காளர்களும், நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 216 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 858 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 74 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் மன்னார்குடி தொகுதியில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 865 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 430 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 295 வாக்காளர்களும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 186 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 557 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 743 வாக்காளர்கள் உள்ளனர். 4 தொகுதிகளிலும் 9 லட்சத்து 17 ஆயிரத்து 712 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 4 தொகுதிகளிலும் சேர்த்து 4 லட்சத்து 50 ஆயிரத்து 359 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 42 ஆயிரத்து 419 பெண் வாக்காளர்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 8 லட்சத்து 92 ஆயிரத்து 785 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
பின்னர் அக்டோபர் 31ந் தேதி  வரையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியில் 16 ஆயிரத்து 874 ஆண் வாக்காளர்கள், 19 ஆயிரத்து 733 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 36 ஆயிரத்து 607 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 5 ஆயிரத்து 589 ஆண் வாக்காளர்கள், 6 ஆயிரத்து 91 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 680 வாக்காளர்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர். வரைவு வாக்காளர் பட்டியலைவிட  11 ஆயிரத்து 285 ஆண் வாக்காளர்கள், 13 ஆயிரத்து 642 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 927 வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். 
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் மூர்த்தி, காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் தினகரன், பி.ஜே.பி சார்பில் மாவட்ட பொருளாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech