முத்துப்பேட்டையில் கடந்த 23 ஆண்டுகளாக ஓதிவரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நேற்று 03-01-2014 வெள்ளிக்கிழமை காலை முதல் துவங்கியது.
இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் அதிரை அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் பங்கேற்று மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழச்சி தினமும் காலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி காலை 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன் துஆ ஓதி 8-20 மணிக்கு நிறைவுபெறும். இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டன.



Post a Comment