திருவாரூர் மாவட்டSDPI கட்சியின் செயற்குழு கூட்டம்

1/04/20140 comments



திருவாரூர் மாவட்ட SDPI கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயற்குழு & சிறப்பு கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் M.A. லத்தீப் தலைமையில் 01.01.2014 திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நைனா முஹம்மது, துணை தலைவர் A. அப்துல் அஜிஸ் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் முஹம்மது பைசல் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்த SDTU (சோஷியல் டெமாக்ரடிக் தொழிற் சங்கம் ) மாநில தலைவர் பாருக் சாஹிப் அவர்கள் SDTUயின் பணிகள் பற்றியும், தொழிற் சங்கத்தில் எப்படி பட்ட & எந்த தொழிலாளர்கள் இணையமுடியும் என்றும், தொழிற் சங்கத்தில் இணைவதின் மூலம் அவர்களக்கு அரசிடமிருந்து கிடைக்கு மானியங்கள் பற்றியும் மற்றும் SDTU அதிகமாக உறுபினர்களை இணைக்க நாம் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு மற்றும் SDTU கிளை நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்….
மற்றொரு சிறப்பு அழைப்பாளரக வந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் கட்சியின் வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரசியல் சூழல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அதன் பிறகு மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுடன் கலந்துரையாட பட்டது.
கூட்டத்தில் மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானங்களை நமது மாவட்டதில் வீரியமாக செயல்படுத்த வேண்டும் என்றும் SDTUயில் அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானிக்க பட்டது

தீர்மானங்கள்:-

1. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், இல்லையேல் ஏற்கனவே திட்டமிட்டபடி 10 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

2. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 3.5% என்பதில் இருந்து 7% சதவிகிதமாக உயர்த்திட இச்செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிட வாக்குறுதியளித்ததை இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

3. நாட்டில் அதிகரித்துவரும் ஊழலை கட்டுப்படுத்தும் விதத்தில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த “லோக்பால் மசோதா” நிறைவேற்றப்பட்டதை இச்செயற்குழு வரவேற்கிறது.
அதே வேளையில் மாநில அளவில் “லோக் ஆயுக்தா” வை அமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க மாநில அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
4. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக மக்களால் தொடந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பா.ஜ.க வோடு மற்ற கட்சிகளை கூட்டணி அமைக்க தரகு வேலைகளில் ஈடுபடுபவர்களை இச்செயற்குழு கண்டிப்பதோடு, மதவாத பாரதிய ஜனதாவை தனிமைப்படுத்திட மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும், பா.ஜ.க வோடு கூட்டணி சேரும் கட்சிகளை பொதுமக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

5. ‘ஒருபால் உறவு‘ சம்பந்தமாக உச்சநீதின்மன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பை இச்செயற்குழு வரவேற்கிறது. இந்த கலாச்சார சீர்கேட்டை அதிகரித்திடும் வகையில் செயல்படும் மத்திய அரசை இச்செயற்குழு கண்டிப்பதோடு, இத்தீர்ப்பிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

6. கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதியினை வசூல்செய்திட தீர்மானிக்கப்பட்டது. கட்சி தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றிடவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
இறுதியாக மாவட்ட பொதுச்செயலாளர் நைனா முஹம்மது அவர்கள் நன்றியரை ஆற்றினார்கள்………
இதில் மாவட்ட செயற்குழு உறுபினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…………………
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech