முத்துப்பேட்டையில் தர்ஹா எல்லை போர்டு உடைப்பு பதற்றம் போலீஸ் குவிப்பு .

1/16/20140 comments



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உலக புகழ் பெற்ற சேக் தாவூத் ஆண்டவர் தர்ஹா உள்ளது. அதற்காக ஆசாத் நகர் கோரையாறு பாலம் முடிவில் ஜாம்புவானோடை ஆற்றாங்கரை ரோடு அருகே தர்ஹாவுக்கு செல்லும் வழி என்று வழி காட்டி எல்லை போர்டு ஒன்று இருந்தது. நேற்று முன்தினம் யாரோ மர்ம நபர்கள் அந்த போர்டை உடைத்து அருகில் இருந்த வாய்க்காலில் வீசி சென்று விட்டனர். 

 மேலும் பிறந்த கொண்டாடிய தர்ஹா அறங்காவளர் பாக்கர் அலி சாகிப்க்கு வாழ்த்து கூற ஒட்டப்பட்ட அதே பகுதியில் உள்ள போஸ்டரியில் சாணி அடித்து விட்டும் சென்றுவிட்டனர். இதனால் தர்ஹா வளாகம் முன்பு இளைஞர்கள் திறண்டனர். பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. 

இதனை அடுத்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி கணபதி தலைமையில் தர்ஹா, ஆசாத் நகர், பழைய பஸ் ஸ்டான்ட், பெரிய கடைத் தெரு போன்ற பகுதியில் நேற்று ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். போர்டு உடைப்பு மற்றும் போஸ்டரில் சாணி அடிப்பு சம்பவங்கள் குறித்து முத்தப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் விசாரனை மேற்கொண்டு உள்ளனர். 

இது குறித்து தர்ஹா முதன்மை அறங்காவளர் பாக்கர் அலி சாகிப் கூறுகையில்: வேண்டும் என்றே அமைதியை சீர்க்குலைக்கும் வகையில் சில விஷமிகள் இந்த செயலில் ஈடுப்பட்டு உள்ளனர். இது போல் சமீபத்தில் வேற ஒரு இடத்தில் இருந்த போர்டு மீது தீபாவளி அன்று வெடி வீசப்பட்டு உடைத்தனர். இது போன்று தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் விஷமிகளை காவல் துறை சரியாக கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

படம் செய்தி:
உடைத்து வீசப்பட்ட தர்ஹா எல்லை போர்டு.


நிருபர்: மு.முகைதீன் பிச்சை ,முத்துப்பேட்டை

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech