முத்துப்பேட்டையில் அரசு மற்றும் தனியார் பஸ் கன்டெக்டர்கள் நடு ரோட்டில் பஸ் நிறுத்தி கடும் வாக்குவாதம்,

1/16/20140 comments






திருவாருர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் நேற்று சிதம்பரத்திலிருந்து சாயல்குடி செல்லும் அரசு பேருந்தும், நாகப்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வந்து நடு ரோட்டில் நிறுத்தினர். அப்பொழுது 'யாரு முன்பு போவது' என்று இரண்டு பஸ் கன்டெக்டர்களும் வாக்குவாதம் செய்து நீண்ட நேரம் தள்ளுமுள்ளு செய்து தகராறில் ஈடுப்பட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லமுடியாமல் தவித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு கூட்டம் கூடியது. போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் பயனிகளும் பொதுமக்களும்; தகராறில் ஈடுப்பட்ட கன்டெக்டர்களை சமாதானம் படுத்தினர். பின்னர் பஸ்களை எடுத்து சென்றனர். இதனால் போக்குவரத்து சுமார் அறை மணி நேரம் தடைப்பட்டது.

படம் செய்தி:
1. நடுரோட்டில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்.
2. தகராறில் ஈடுப்பட்ட கன்டெக்டர்களை சமாதானம் படுத்தும் பொதுமக்கள்




நிரூபர் மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech