முத்துப்பேட்டை நகர தமுமுக செயற்குழு கூட்டம்

1/07/20140 comments






திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் நகர அலுவலகத்தில் தமுமுக செயற்குழு கூட்டம் நெய்னா முகம்மது நகர தலைவர் தமுமுக அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் தீன் முகம்மது நகர செயலாளர் மமக அவர்கள் முன்னிலை வகித்தார்.இதில் முகம்மது நபீல் நகர துனை செயலாளர் மமக அவர்கள் முசாபர் நகர் கலவரம் பற்றி உரையாற்றினார்.

தீர்மானங்கள் :

1) தலைமையின் அறிவிப்பின்படி முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முத்துப்பேட்டையில் நகர சார்பில் நிதி வசூல் செய்வது என தீர்மானம் செய்யப்பட்டது.

2) ஜமாத்தை நேரில் சந்தித்து முசாபர் நகர் கலவரத்தில் பற்றி விளக்கி மற்றும் ஜூம்மா தொழுகைக்கு பிறகு வசூல் செய்யப்படும்.

3) முசாபர் நகர் கலவரம் பற்றி மக்கள் விழிப்புணர்படுத்தும் வகையில் பேனர் வைக்கப்படும்.

இதில் ஜெகபர் சாதிக் ஒன்றிய செயலாளர் தமுமுக,முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக,தாவுதுஷா நகர பொருளாளர் தமுமுக , முகம்மது யாசீன் நகர துணை தலைவர் தமுமுக,ஹாமீம் கத்தார் நிர்வாகி, மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.













Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech