திருவாருர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்த முன்னால் பேரூராட்சி தலைவர் ஹாலீது மகன் ஹாரூன். இவரும் முன்னால் பேரூராட்சி கவுன்சிலராக இருந்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டை, ஆசாத் நகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக பள்ளிவாசல் கட்டி வருவதாகவும், ரஹ்மத் நகர் பகுதியில் ஒரு சிலர் சிமிண்ட் சாலையை உடைத்து சேதப்படுத்தியதாகவும,; மேலும் பேரூராட்சிக்கு சொந்தமானவைகளை தொடர்ந்து பலர் திருடியும், கைப்பற்றியும் வருவதால் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருவதை செயல் அலுவலர் சித்திவிநாயக மூர்த்தியிடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு செயல் அலுவலர் ஆதர்வாகவும் செயல் பட்டுவருகிறார். மேலும் செயல் அலுவலர் சித்தி விநாயகமூர்த்தி மீது தஞ்சை அடுத்த வலங்கைமான் பேரூராட்சியில் மனைப்பிரிவு அங்கீகாரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து அவர்மீது 17.பி சட்டப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகையால் சுய ஆதாயத்திற்காக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியும், எங்கள் தெருவிற்கு இடையூறாகவும் பணியாற்றி வரும் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் மனு ஒன்றை முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்து உள்ளார். இது குறித்து போலீசார் மனு மீது விசாரனை மேற்கொண்டு உள்ளனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
படம் செய்தி:;
செயல் அலுவலர் சித்தி விநாயகமூர்த்தி.
நன்றி நிருபர்: மு.முகைதீன் பிச்சை.,
முத்துப்பேட்டை.

Post a Comment