திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானொடை சேக்தாவூது ஆண்டவர் தர்ஹாவில் 112-ம் ஆண்டு பெரிய ஹந்தூரி விழா மார்ச் 2-ந் தேதி துவங்குகிறது. 14 நாட்கள் நடைபெறும் இந்த பெரிய ஹந்தூரி விழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொள்வார்கள். அதனை முன்னிட்டு புனித கொடி மரம் நடும் நிகழ்ச்சி நேற்று காலை சிறப்பாக நi;டபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு தாவுதியா பள்ளிவாசலில் மௌலூது ஓதப்பட்டது. 8.30-க்கு தர்ஹா முதன்மை அங்காவலர் பாக்கர்அலி சாகிப் உரை நிகழ்த்தினார். தர்ஹா மௌலவி ஜக்கரியாசாகிப் புனித துவா ஓதி பிரார்த்தனை செய்தார் காலை 9 மணிக்கு வானவேடிக்கை, அதிர் வேட்டுடன் புனித கொடி மரம் நடத்தப்பட்டது. அப்பொழுது பக்தர்கள் 'நாரே தக்பீர் நாரே தக்பீர்' என்று ஆரவாரத்துடன் கோசம் போட்டனர். பின்னர் அனைவருக்கும் தர்ஹா நிர்வாகம் சார்பில் (தப்ரூக்) பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் டிரஸ்டி தமீம் அன்சாரி சாகிப், நூர்முகம்மது சாகிப் உட்பட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
படம் செய்தி :
1. அறங்காவலர் பாக்கர் அலிசாகிப் உரை
2. கொடி நிலை நிறுத்தி காட்சி.
(5 photos)படம் செய்தி :
1. அறங்காவலர் பாக்கர் அலிசாகிப் உரை
2. கொடி நிலை நிறுத்தி காட்சி.
நன்றி நிருபர்: மு.முகைதீன் பிச்சை.,
முத்துப்பேட்டை.





Post a Comment