முத்துப்பேட்டை காவல் நிலையம் எதிர்புறம் உள்ள புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் பள்ளி, எஸ்.எஸ்.ஐ அலுவலகம், தொடக்கக்கல்வி அலுவலகம், அங்கன்வாடி மையம் போன்றவை இயங்கி வருகிறது. இதனால் பள்ளி வளாகத்துக்குள் சுற்றுப்புறம் உள்ள பகுதிகள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு பயன்பாட்டில் உள்ள கட்டிடத்தின் பின்புறம் திறந்த நிலையில் செப்டிக் டேங் உள்ளது.
ஒதுங்கிய பகுதி என்பதால் யாரும் அதனை கவனிக்காமல் கேட்பாரற்ற பகுதியாக இருந்து வந்தது. நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் ஆசிரியர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் பேட்மிட்டன் பந்து விளையாட வந்தனர். அப்போது மாடு ஒன்று தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்ததை கண்டு தொடக்கக்கல்வி அலுவலகம் பின்புறம் சென்று பார்த்தனர்.
அங்கு ஒரு பசு மாடு திறந்து கிடந்த செப்டிக் டேங் கழிவுக்குள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உடனடியாக ஆசிரியர்கள் முத்துப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர். பசு மாடு இரண்டு தினங்களுக்கு செப்டிக் டேங்கில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பின்னர் மயக்க நிலையில் காணப்பட்ட பசு மாட்டிற்கு முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் கங்கா சூடன் மருத்துவ உதவிகளை செய்தார். அதனைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து பசுமாடு எழுந்து நடந்து சென்றது.

Post a Comment