முத்துப்பேட்டை தமுமுக வின் முயற்சியால் சிறுவனை தாக்கிய மர்ம நபர்கள் கைது

10/22/20140 comments





முத்துப்பேட்டையை சேர்ந்தவர் கஜ்ஜாலி.  இவரது மகன் முஹம்மது ரஹூப் (வயது 12).ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.   இவர் தனது இரு சக்கர வாகனத்தில் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் கிராமத்தின் அருகே சென்ற போது  அங்கு மறைந்திருந்த சமூக விரோதிகளால் அந்த மாணவனை வழி மறித்து  திடீர்  தாக்குதலில் ஈடுபட்டுவிட்டு   தப்பியோடி  விட்டதாக  தெரிகிறது.

இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  இரத்த  வெள்ளத்தில்  துடித்துக் கொண்டிருந்த சிறுவனை  அப்பகுதியை  சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக  தற்போது   தஞ்சை  தனியார்  மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உடனே முத்துப்பேட்டை காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமுமுக மாவட்ட துணை தலைவர் முகம்மது அலீம் அவர்கள் தலைமையில் நேற்று இரவு 7.30 மணியளவில் காவல் நிலையம் சென்று DSP கணபதி மற்றும் இன்ஸ்பெக்டர் சண்முக வேல் அவர்களை சந்தித்து உடனடியாக  கைது  செய்ய வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து முத்துப்பேட்டை காவல்துறை 3 நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  மற்ற குற்றவாளிகளை இன்று  மாலைக்குள் கைது செய்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமுமுகா வின் பணி தொடரட்டும்.  அதற்கு வல்ல அல்லாஹ் துணை புரியட்டும்.


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech