முத்துப்பேட்டை அருகே எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை.

10/22/20140 comments


முத்துப்பேட்டை அக் - 18
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மங்கள நாயகி புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(35). இவரது கணவர் சிவகுமார்(40) தச்சுத் தொழிலாளி. இவர்களுக்கு 3 வயதில் சுஜா, சுபாஷ்ஸ்ரீ ஆகிய இரண்டு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன் கணவன், மனைவிக்குள் இடையே ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரி வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டார். உடன் அவரை உறவினர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்திருந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech