எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் இளைஞர் சுடப்பட்ட வழக்கு: CBCID மற்றும் DIGயும் நேரில் விசாரணை

10/25/20140 comments


ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரால் சுடப்பட்டு இளைஞர் உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிபிசிஐடி டிஐஜி சனிக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டார்.

எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி உதவி ஆய்வாளர் காளிதாஸ், அதே ஊரைச் சேர்ந்த செய்யது முகம்மது என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தியபோது ஏற்பட்ட தகராறில், சுட்டதில் சம்பவ இடத்திலேயே செய்யது முகம்மது உயிரிழந்தார். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், உதவி ஆய்வாளர் காளிதாûஸ பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி கடந்த 16-ஆம் தேதி எஸ்.பி. பட்டினம் காவல் நிலையம் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, உள்ளூர் பிரமுகர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தது. கடந்த 17-ஆம் தேதி மதுரை சிபிசிஐடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மன்மதபாண்டியன், காவல் துறை ஆய்வாளர் சரவணக்குமார், சந்திரசேகரன், மணிமாறன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.இந்த நிலையில்

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech