முத்துப்பேட்டை அருகே OMA பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்க விழா

10/22/20140 comments



முத்துப்பேட்டை அக் – 18 
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடையில் உள்ள ஓ.எம்.ஏ மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. பள்ளியின் தாளாளர் ரெங்கசாமி தலைமை வகித்தார். முதல்வர் சாமிநாதன் வரவேற்று பேசினார். முத்துப்பேட்டை அரசு மருத்துவர் அருண் சந்தர் கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 175 மாணவ, மாணவிகளின் அறிய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இடம்பெற்றன. 

இதனை காணவந்தவர்களுக்கு உருவாக்கிய மாணவ, மாணவிகள் விளக்கமளித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜசோழன், பிஏட் கல்லூரி ஆசிரியர் தங்கமணி, பள்ளி துணை முதல்வர் சுதா, அறிவியல் ஆசிரியைகள் அஞ்சலி, நளினி, தமிழ், ஆசிரியை மீனா மற்றும் பலரும் கலந்துக்கொண்டனர்

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech