முத்துப்பேட்டையில் லாரியை மறித்து டிரைவரிடம் ரூ.4ஆயிரம் வழிப்பறி

11/03/20140 comments

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் வடக்கு குத்தகை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம்(32). லாரி டிரைவர். நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் இருந்து சவுக்கு மரங்களை லோடு ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு புறப்பட்டார்.


முத்துப்பேட்டை - பட்டுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் மங்களூர் என்ற இடத்தில் சென்றபோது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த 3 பேர் லாரியை வழிமறித்தனர். பின்னர் மாணிக்கவாசகத்தை கீழே இறக்கி அடித்து அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்துக் கொண்டு வந்த வழியிலேயே தப்பிச்சென்றனர்.

கோயிலூர் என்ற இடத்தில் பைக்கின் பின் னால் வந்த வேறு 2 லாரி களை அதன் டிரைவர்கள் நிறுத்தினர். அதை பார்த்ததும் மர்ம நபர்கள் பைக்கை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர். பணத்தை பறிகொடுத்த லாரி டிரைவர் மாணிக்கவாசகம் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா ஆகியோர் வழக்கு பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் விட்டு சென்ற பைக்கையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech