முத்துப்பேட்டை அருகே அழுகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை கலெக்டருக்கு கோரிக்கை

11/03/20140 comments



முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் சங்கேந்தியை சேர்ந்த கவுன்சிலர் நாகராஜன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை பிர்காவில் உள்ள சங்கேந்தி மற்றும் வடசங்கேந்தி கிராமத்தில் 900 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது.

பாதிக்கபட்ட பயிர்களுக்கு உரம், பூச்சி மருந்து வழங்க வேண்டும். தேங்கிய நீர் மரைக்கா கோரையாறு, கிளைதாங்கியாறு போன்ற ஆறுகள் வழியாக தண்ணீர் வடிய வேண்டும். மாறாக கிழக்கே வடிய வேண்டிய தண்ணீர் மேற்கு நோக்கி பாய்கிறது. மேற்கண்ட ஆறுகள் முறையாக தூர்வாரப்படாததாலும், ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி கிடப்பதாலும், இடும்பவனத்தில் உள்ள தடுப்பு அணை திறக்கப்படாததுமே காரணம்.

வடசங்கேந்தி வடிகாலில் இருந்து எடையூர் வழியாக 2கீ.மீ தூரம் புதிய  வடிகால் அமைத்து நேரிடையாக மரைக்கா கோரையாறில் நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது நீர் வடிந்த நிலை யில் பயிர்கள் அழுகிய நிலை யில் உள்ளது. எனவே அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க
வேண்டும்.

 இவ்வாறு கவுன்சிலர் நாகராஜன் மனுவில் கூறியுள்ளார்

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech