தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று 31.10.2014 மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் கே. சேக் ஜலாலுதீன் தலைமை வகித்தார். கண்டன உரையை SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே. ஹாஜி சேக் நிகழ்த்தினார். SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் அமானுல்லாஹ் நன்றியுரை ஆற்றினார்.
ஆர்பாட்டத்தின் போது இந்திய திருநாட்டின் வளங்களை தனியார், அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், நாட்டை பிளவுபடுத்த துடிப்பதாக கூறி பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






Post a Comment