முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் வாழும் அனைத்து சமுதாய மக்கள் பயன்பாட்டிற்காக முத்துப்பேட்டை பைத்துல்மால் சார்பில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது.
முத்துப்பேட்டை பைத்துல்மால் துணை தலைவர் நெய்னா முஹம்மது தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தொழில் அதிபர் மருத்துவர் யூ. லியாகத் அலி பைத்துல்மால் ஆம்புலன்சை மக்கள் பயன்பாட்டிற்காக அர்பணித்து வைத்தார். இவற்றை பைத்துல்மால் தலைவர் ஜே. இல்முல்லா சனூஃபர் பெற்றுகொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்புரையை பைத்துல்மால் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அஷரப் அலி, அஸ் ஷஃபனா பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் பி எம் இப்ராஹீம் காசிமி, எச். முகைதீன் பகரீ ஆகியோர் ஆற்றினார்கள்.
முன்னதாக அறிமுக உரையை பைத்துல்மால் செயலாளர் ஏ. அப்துல் சலீம் நிகழ்த்தினார். வரவேற்புரையை பைத்துல்மால் பொருளாளர் ஏ.மீரா ஹுசைன் வழங்கினார்.
இறுதியில் நன்றியுரையை ஜே. மாலிக் ரஹ்மான் வழங்கினார்.இதில் பைத்துல்மால் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆம்புலன்ஸ் சேவை தொடர்புக்கு:
88 83 00 23 33, 88 83 37 77 86, 98 42 67 16 07,




.jpg)


Post a Comment