திருவாரூர் மாவட்டத்தில் 176 மாற்று திறனாளிகளுக்கு ரூ8 லட்சத்தில் உபகரணம்

11/16/20130 comments

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 176 பேருக்கு ரூ.7 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்களை கலெக்டர் நடராஜன் வழங்கினார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2013-14ம் ஆண்டிற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் மருத்துவ குழுவினர் மூலம் நடைபெற்றது. இந்த முகாம்களில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதுகு தண்டுவடம் நிலையாக நிற்பதற்கான  கருவி, முதுகுதண்டு நிலையாக நிற்காத குழந்தைகளுக்கான சிறு நாற்காலிகள், நடை பழகுவதற்கான நான்கு சக்கர நாற்காலி, இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான காலணிகள் என மொத்தம் 176 மாற்று திறனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 93 ஆயிரத்து 740 மதிப்பிலான உபகரணங்களை கலெக்டர் நடராஜன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) மணி, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் (பொ) ஜெயசீலி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech