புது டெல்லி: இணையப் பயன்பாட்டாளர்கள்
எண்ணிக்கையில் இந்தியா உலகிலேயே மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும்,
இந்தியாவில் தற்போது 20 கோடி பேர் இணையம் பயன்படுத்துவதாகவும் இந்திய
இணையம் மற்றும் கைபேசி கழகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை,
இந்தியாவின் இணையதளப் பார்வையாளர்கள் மற்றும் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை
20.5 கோடியை எட்டியுள்ளது என்றும் மேலும் 2014ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள்
இது 24.3 கோடியை எட்டக்கூடும் என்றும் இந்திய இணையம் மற்றும் கைபேசி
கழகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறப் பகுதிகளைப் பொருத்த அளவில், அக்டோபர் மாதம் வரையிலான இணையப் பயன்பாட்டாளர்கள் 13.7 கோடி என்றும் அது டிசம்பர் மாதத்துக்குள் 14.1 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கிராமப் பகுதிகளில் 2012ம் ஆண்டு ஜூன்
முதல் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 58 சதவீதம் வளர்ச்சி
அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் பெருநகரங்களைப் பொருத்த அளவில்,
மும்பை (12 கோடி), டெல்லி (8.1 கோடி), ஹைதராபாத் (4.7 கோடி) இதில்
முன்னிலை வகிக்கின்றன என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

Post a Comment