முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளை சேர்ந்தோர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பேட்டை அங்காளம்மன் கோயில் வீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி ஏற்று விழா நேற்று நடைப்பொற்றது. நகர செயலாளர் மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வீரசேனன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வீரபத்திரன், ஒன்றிய செயலாளர் முருகைய்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்எல்ஏ உலகநாதன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசுகையில், சாதாரன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும், பாதுகாப்புக்கும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறவும் தினந்தோறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இந்த கட்சி, பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி என்பதை உணர்ந்து தற்போது பலர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் ராமநாதன், மாவட்ட குழு சண்முகம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் குணகேகரன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் மீனம்மாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, உமேஷ்பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த 120 பேர் பல்வேறு கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். அவர்களை எம்எல்ஏ உலகநாதன், மாவட்ட செயலாளர் வீரசேனன் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Post a Comment