அதிரையில் காவல்துறை கண்டித்து மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ! !

11/19/20130 comments



முதல்வரின் அறிவிப்பை அதிரை காவல் நிலையத்தில் செயல்படுத்த வலியுறுத்தி ம.ம.க வின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு

கடந்த அன்று 23-04-2013 நடை பெற்ற தமிழ்நாடு சட்ட பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கையின் கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர். எம். எச் ஜவாஹிருல்லா அவர்கள் பாஸ்போர்ட் விசாரணைக்காக சிறப்பு பிரிவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், சில மாவட்டங்களிலே, இராமநாதபுரம் மாவட்டம் உட்பட, பெண்கள் உள்பட எல்லோரையும் காவல் நிலையங்களுக்கு வரவழைத்து விசாரணை செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. இதை சீர்படுத்துவதற்கு இந்த அரசு முன்வர வேண்டுமென்று என்று கேட்டுக்கொண்டதை அடுத்து, சி.ஆர்.பி.சி. சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளை சாட்சியாக விசாரணை செய்யக் கூடாது. காவல் நிலையத்திற்கு அழைக்கக் கூடாது. அவர்களை அவர்களது இருப்பிடத்திற்குச் சென்று தான் விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்கு அவர்களை அழைக்கத் தேவையில்லை அவ்வாறு நடை பெற்றிருந்தால் அது விசாரிக்கப்பட்டு, இது போன்று இனிமேல் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அதிரை காவல் நிலையத்தில் தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தி எதிர்வரும் தஞ்சை தெற்கு மாவட்ட அதிராம்பட்டினத்தில் பாஸ்போர்ட் விசாரணையில் பொது மக்களை அலைகழிக்கும் அதிரை காவல்துறையே கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்....

இன்ஷா அல்லாஹ் 21.11.2013 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் எம்.தமிமுன் அன்சாரி , மாநில பொது செயலாளர் மமக மற்றும் ராவுத்தர்ஷா மாநில அமைப்பு செயலாளர் மமக அவர்களும் கண்டன உரையாற்ற உள்ளார்.



Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech