மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் கலெக்டர் அலுவலகத்தை மாற்று திறனாளிகள் முற்றுகை

11/19/20130 comments

 மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் கலெக்டர் அலுவலகத்தை மாற்று திறனாளிகள் முற்றுகை ! !
திருவாரூர் : மாற்றுத்திறனாளிகளுக்கென்று மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும், ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வதை நிறுத்த வேண் டும் என்பது உட்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் வாராந்தோறும் திங்கட்கிழமைகளில் நடை பெறும் மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டத்தை போன்று, மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கென்று மாதந்தோறும் தனியாக குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும்.
திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் உட்பட அனைத்து காலி பணியிடங்களையும் உடன் நிறப்ப வேண்டும், மாத உதவித் தொகை பெற்று வருவதை காரணம் காட்டி ரேஷன் கார்டிலிருந்து மாற்றுதிறனாளிகளின் பெயர் களை நீக்குவது, ரேஷன் கார்டினை பறிமுதல் செய்வது போன்றவற்றை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், மத்திய மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சலுகைகளையும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவாரூரில் மாற்றுதிறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் முத்துவேல் தலை மையில் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட் டம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech