​அங்கோலா நாட்டில் இஸ்லாத்திற்குத் தடை மற்றும் பள்ளிவாசல்களை இடிக்க உத்தரவு ! !

11/26/20130 comments

லுவாண்டா: ஆஃப்ரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அங்கோலா நாடு இஸ்லாம் மதத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் மறு உத்தரவு வரும் வரை மசூதிகளை மூடி வைக்கவும் அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோசா க்ரூஸ் இசில்வா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டின் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாம் மதத்தை அங்கீகரிக்கவில்லை; ஆகவே மறு உத்தரவு வரும்வரை மசூதிகளை மூடிவிடப் பணித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

"அங்கோலாவின் கலாச்சாரத்துக்கு உடன்பட்டு வராத வழிபாட்டு முறைகளைக் கொண்ட மதங்களை நாங்கள் தடைசெய்துள்ளோம்; அவ்வகையில் இஸ்லாம் மதமும் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தடையின் ஒரு பகுதியாக மசூதிகள் இடிக்கப்படும்" என்றும் அமைச்சர் கூறினார். "சட்ட அங்கீகாரம் கோரி ஆயிரக்கணக்கான மனுக்கள் வந்துள்ளன" என்றும் அப்பெண் அமைச்சர் கூறினார்.

அங்கோலா அதிபர் ஜோஸ் எட்வர்டோ டாஸ் சாண்டோஸ் இது பற்றி கூறுகையில்:"இது இறுதியானது; இவ்வாறாக எங்கள் நாட்டில் இஸ்லாமிய ஆதிக்கத்தை முறியடிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
 .


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech