திருவாரூர்யில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நட ராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் டி.ஆர்.ஒ மணி மாறன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஜயலெட்சுமி, கலால் உதவி ஆணையர் காளிதாஸ், பிற்பட்டோர் நல அலுவலர் மாலா உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதியோர் உதவித் தொகை, கல்வி உதவி தொகை, ரேஷன் கார்டு, இலவச பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொது மக்களிடமிருந்து 172 மனுக்கள் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார்.
மேலும் வருவாய் துறை மூலம் 2 பேருக்கு கிராம உதவியாளர் பணி நியமன உத்தரவும், நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் 4 பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை, கலெக்டர் விருப்ப நிதி மூலம் ரூ.5 ஆயிரம் மதிப்பில் 2 பெண்களுக்கு தையல் மிஷின், 10 பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டு ஆகியவற்றை கலெக்டர் நடராஜன் வழங்கினார்.

Post a Comment