டிசம்பர் 6 அன்று திருவாரூர்யில் நடைபெற இருக்கும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பணிகளை குறித்து ஆலோசனை கூட்டம்
முத்துப்பேட்டை நகர ஆலோசனை கூட்டம் 24.11.2013 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு ஆசாத்நகர் நகர தமுமுக அலுவலகத்தில் தலைவர் எம்.நெய்னா முஹம்மது நகர தலைவர் தமுமுக அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.முஹம்மது மாலிக், ம.ம.க நகர செயலாளர் வழகறிஞர் தீன் முஹம்மது, ஒன்றிய செயலாளர் ஜெஹபர் சாதிக், தமுமுக நகர செயலாளர் முகம்மது பைசல், தமுமுக ம.ம.க நகர பொருளாளர் தாவூதுஷா, ம.ம.க நகர துணைச்செயலாளர் நபில் அஹமது, மாணவர் இந்தியா செயலாளர் பவாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்..
தீர்மாணம் 1:
டிசம்பர் 6 அன்று மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்க்காக
1.தெருமுனை பிரச்சாரங்களை செய்வது
2.டிஜிட்டல் போர்டுகள் வைப்பது
3.மக்களிடம் பணிகளுக்கான பொருளதார உதவிகள் கோருவது
4.வீதி வீதியாக நோட்டீஸ் வினியோகம் செய்வது
என்று தீர்மானங்கள் போடப்பட்டது.
தீர்மாணம் 2:
இன்ஷா அல்லாஹ் 30.11.2013 அன்று ஆசாத் நகர் தமுமுக அலுவலகத்தில் மாணவர் இந்தியா மற்றும் தமுமுக மாணவர் அணி நிர்வாகிகள் பொதுக்கூழு கூட்டம் நடைபெறும்.
தகவல்:முகைதீன்




Post a Comment