முத்துப்பேட்டை கார் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் கோரிக்கை ! !

11/16/20130 comments


முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் அருகில் தனியார் கார் ஸ்டாண்ட் நிர்வாகிகள் கோரிக்கை

திருவாரூர் மவாட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் அருகில் தனியார் கார் ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. இதில் நூற்றுகக்ணக்காக கார்கள் வந்து செல்கின்றன.


மேலும் முக்கிய பகுதியாக காணப்படும் இப்பகுதியில் அரசு அலுவலகங்கள். தனியார் நிறுவனங்கள் நிறைய உள்ளன. எந்த நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும் இப்பகுதியில் காலனி வீடுகளும் உள்ளன. கார் ஸ்டாண்ட் ஒட்டி உள்ள பழைய போஸ்ட் ஆபிஸ் அருகில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடியிருப்பில் வசிப்பவர்கள் கடைகாரர்கள் பலரும் அந்த இடத்தில் கழிவு பொருட்களை கொட்டி வருகிறார்கள். அப்படி கொட்டப்படும் கழிவு பொருட்களை பேரூராட்சி நிர்வாகமும் உடனுக்குடன் அப்புறப்படுத்ததுவதில்லை. இதனால் நாற்றம் மணம் வீசுவதால் அப்பகுதியில் நடமாட அறுவறுப்பாக உள்ளதாக மேலும் முத்துப்பேட்டை பகுதியில் இதுபோன்ற கழிவு பொருட்களால் டெங்கு காய்ச்சல் பெரும் அளவில் மக்களுக்கு பாதிப்பு உண்டாக்கி உள்ளது. இந்த நிலையில் இங்கு கொட்டப்படும் கழிவு பொருட்களால் நோய்கள் ஏற்படலாம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். பேரூராட்சி அலுவலகம் அருகிலேயே இச்சம்பவம் நடைபெற்று வருவதால் அப்பகுதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஓட்டுனர்கள் ஹாஜில் அசரப், முருகன், முகம்மது யாசின், ராமநாதன் ஆகியோர் கூறுகையில் தினமும் இந்த இடத்தில் இப்பகுதியினர் மோசமான கழிவு பொருட்களை கொட்டி வருகிறார்கள். இதனை பலமுறை கண்டித்தும் மீறி நடந்து வருகிறது. பேரூராட்சி நிர்வாகமும் உடனுக்குடன் அள்ளுவது கிடையாது. கொட்ட தடைசெய்யவும் இல்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் பலனில்லை. இதன் அருகில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு வரும் குடிமகன்களும் இங்கேயே வைத்து தன்னி அடிக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் கழிவு பொருட்களை போட்டுச் சென்று விடுகிறார்கள். இதனால் மேலும் மன உலைச்சல் ஏற்கடுகிறது. மக்கள் மற்றும் எங்களின் நலன் கருதி இந்த பகுதியில் கழிவு பொருட்கள் கொட்டுவதை தடைசெய்ய வேண்டும். இல்லையேல் பேரூராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டி வைத்து உடனுக்குடன் அதனை அகற்ற வேண்டுகிறோம்.

நன்றி:muthupet.org
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech