UPயில் முஸஃபர் நகர்: முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிக்க அரசு சதித்திட்டம்!
லக்னோ: உத்திரபிரதேசம் முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் சொத்துக்களை கைபற்ற அரசு சூழ்ச்சி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உ.பி கலவரத்தில் பாதிக்கப்படு அகதிகளாக இருப்பவர்களிடம் உ.பி அரசு ரூ 5 லட்சம் தொகை வழங்கி அதற்குப் பதிலாக அவர்களின் சொந்த ஊருக்குச் திரும்ப செல்லமாட்டோம் என்றும், அங்குள்ள தங்களுடைய சொத்துகளுக்கு உரிமை கோர மாட்டோம் என்றும் அவர்களிடம் பிரமாணப் பத்திரம் எழுதி வாங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள அரசு, பாதுகாப்பு காரணமாக தங்களுடைய கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல விரும்பாத 1800 குடும்பத்தினருக்குத்தான் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கிறது.
அதேவேளை, முஸ்லிம்களை முஸஃபர் நகரை விட்டு வெளியேற்றி அவர்களின் சொத்துக்களை அபகரிக்க அரசும், ஜாட் இனத்தவரும் இணைந்து நடத்திய சதித்திட்டம்தான் முஸஃபர் நகர் கலவரம் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்த ஹுஸைன்பூர் கிராமத்தில் 3 முஸ்லிம் குழந்தைகள் கொல்லப்பட்டனர் அருகில் உள்ள முஹம்மது பூர் ராய்சிங் கிராமத்திற்கு கரும்பு மற்றும் வைக்கோல் சேகரிக்க இக்குழந்தைகள் சென்றிருந்தபோது தாக்கப்பட்டு பலியானார்கள். மேலும் அஜ்மல், மெஹர்பான், அம்ரோஸ் ஆகியோரும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்கள் தங்களுடைய கிராமத்திற்கு வருவதையும், அவர்களின் நிலங்களில் உள்ள பொருட்களைச் சேகரிப்பதையும் தடுப்பதே இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கமாகும் என்று அப்பகுதியின் பஞ்சாயத்துத் தலைவர் ஷானவாஸ் கூறியுள்ளார்.
இதுபோன்ற வன்முறைச் செயல்களில் முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிக்க அரசும் துணை போகிறது என்று அப்பகுதி கிராமவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Post a Comment