முத்துப்பேட்டை வர்த்தக கழக கட்டிடத்திற்கு அல் மஹா ஹைதர் அலி அவர்கள் 1 லட்சம் நன்கொடை ! !

12/07/20130 comments

முத்துப்பேட்டை வர்த்தக கழகத்திற்காக புதிய கட்டிடம் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வருகிறது. தற்பொழுது கட்டப்பட்டு முழுமை பெறாத நிலையில் இருக்கும் கட்டிடத்திற்கு நிதி உதவி தேவை ஏற்பட்டது.

இந்த நிலையில் முத்துப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபரும் அல்மஹா அறக்கட்டளை நிறுவனரும் அல்மஹா இலவச பெண்கள் கல்லூரியின் நிறுவனருமான ஹைதர்அலி கட்டிடம் முழுமை பெற தேவையான தொகை ரூ.1 லட்சத்தை வர்த்தககழக தலைவர் ராஜாராம் வசம் வழங்கினார்.

மேலும் சங்கத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி கூறினார்.

அப்பொழுது கௌரவத் தலைவர் திருஞானம் பொதுச்செயலாளர் ராமலிங்கம் துணைச் செயலாளர் மாரிமுத்து ,ஆலோசகர் ஹீரா பாருக் , மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் வழக்கறிஞர் தீன்முகம்மது நகர காங்கிரஸ் செயலாளர் ஜெகபர்அலி அல்மஹா குரூப் நிர்வாகி இப்ராஹிம் உட்பட பலரும் இருந்தனர்.


நன்றி:முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்









Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech