இறையில்லத்தை மீட்க திருவாரூரில் குவிந்த மக்கள் திரள்....
பாபர் மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்ககோரியும்... பாபர் மஸ்ஜித்தை இடித்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரியும்... பாபர் மஸ்ஜித் மேல்முறையீட்டு வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க கோரியும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் தமுமுக சார்பாக டிசம்பர் 6 அன்று திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாலை 4.00 மணியளவில் திருவாரூர் மாவட்ட தலைவர் ஹலிலூர் ரஹ்மான் தலைமையில் லியாக்கத் அலி மாவட்ட செயலாளர் தமுமுக, சீனி ஜெகபர் சாதிக் மாவட்ட செயலாளர் மமக , அஹமது கமால் மாவட்ட பொருளாளர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது கெளஸ் மற்றும் புரபுதாஸ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் மமக அவர்கள் கண்ட உரை நிகழ்த்தினார்.
இதில் ஆண்களும், பெண்களும் 1000 மேற்ப்பட்டோர் கலந்து கொண்டார்கள்.இறுதியாக திருவாரூர் மமக நகர மன்ற உறுப்பினர் கலிபுல்லா அவர்கள் நன்றியுரை கூறினார்.
தகவல்:முகம்மது பைசல் , நகர செயலாளர் தமுமுக





Post a Comment