திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் நகர மமக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் M.நெய்னா முகம்மது நகர தலைவர் மமக அவர்கள் தலைமையில் மற்றும் L.தீன் முகம்மது நகர செயலாளர் மமக அவர்கள் முன்னிலை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக S.முகம்மது மாலிக் மு.மாவட்ட செயலாளர் மமக அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1) முத்துப்பேட்டை பட்டறைகுளத்தில் நடைபெறும் முறைகேடான பணிகளை கண்டித்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11.12.2013 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுக்கை போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2)தமுமுக சார்பில் திருவாரூர்யில் டிசம்பர் 6 அன்று நடந்த போராட்ட செலவுகளை கணக்கு வழக்கு பார்க்கப்பட்டது
3)மதுக்கூர் கிளையின் சார்பாக ஒரு வேனில் தஞ்சைக்கு புறப்பட்டுச்சென்ற பொழுது பாப்பாநாடு அருகே கடந்து செல்ல முற்படும் போது வாகனத்தை இடைமறித்த இந்து முன்னணியினர் தாக்கப்பட்டார் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.அதை போல முக்கியமான குற்றவாளியே இன்னும் கைது செய்யவில்லை.உடனடியாக காவல்துறை அவர்களை கைது செய்ய வேண்டும்.
ஆகிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது....
இதில் ஜெகபர் சாதிக் ஒன்றிய செயலாளர் தமுமுக ,முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக , தாவுதுஷா நகர பொருளாளர் தமுமுக ,அமீர் பவாஸ் நகர செயலாளர் மாணவர் இந்தியா மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.



Post a Comment