முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது ! !

12/04/20130 comments


முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.


வேட்டையாடப்படுவதை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரம்
முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் வெளிநாட்டு பறவைகள் மட்டும் வாழிடமாக திகழவில்லை .இமயமலை போன்ற உள்நாட்டு பகுதிகளில் இருந்து வருகை தரும் பறவைகளுக்கும் ஏற்ற வாழிடமாக திகழ்கிறது.

1952-ஆம் ஆண்டு முதல் முத்துப்பேட்டை அலையாத்திகாடு வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் 5 மாதங்கள் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் பறவைகள் அதிகம் தென்படுவதால் ,அவை வேட்டை யாடப்படுவதை தடுக்க திருவாரூர் மாவட்டம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இது பற்றி முத்துப்பேட்டை வன சரகர் தனராமன் கூறியதாவது:

முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.அவை வேட்டையாடப்படுவதை தடுக்க திருவாரூர் மாவட்ட வன அலுவலர் சவுந்தராஜன் உத்தரவுவின் பேரில் கடல் மார்க்கமாகவும் , நிலம் மார்க்கமாகவும் கண்காணித்து வருகிறோம்.பறவைகளை வேட்டையாடினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech